Posts

சிவன் மலை உத்தரவு பெட்டியில் வேல்

Image
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும். வேறு எந்த முருகன் கோவிலும் இல்லாத சிறப்பம்சமாக இங்கு ஆண்டவரின் உத்தரவு பெட்டி அமைந்துள்ளது.  முருகப்பெருமான் ஒருவரின் கனவில் தோன்றி குறிப்பிட்டு ஒரு பொருளைக் கூறி அதனைக் கோவில் முன் மண்டப தூணில் உள்ள உத்தரவு பெட்டியில் அதனை வைக்க உத்தரவிடுவார். உத்தரவு பெற்ற அந்த பக்தர் சென்று கோவில் நிர்வாகத்தினரிடம் சென்று கூறினால் அவர்கள் சாமியிடம் பூ போட்டு கேட்டுவிட்டு பின்பு அந்த பக்தரின் கனவில் வந்த அந்த பொருளை உத்தரவு பெட்டியில் வைப்பார்கள். இதற்காக கால நிர்ணயம் கிடையாது. மீண்டும் வேறு ஒருவரின் கனவில் வந்து வேறு ஒரு பொருளை வைக்கும் வரை இந்த பொருள் இருக்கும். தற்போது இங்கு உத்தரவு பெட்டியில் வேல் வைக்க உத்தரவு வந்துள்ளது. இப்போது அங்கு வேல் வைத்து  உள்ளார்கள்.  அந்த உத்தரவு பெட்டியில் உள்ள பொருளுக்கு ஏற்ப நிகழ்வுகள் உலகில் நடக்கும். 

திருச்செந்தூர் பற்றி திருப்புகழில்

திருச்செந்தூர் பற்றி திருப்புகழில்  ஒண் தடம் பொழில் நீடு ஊர் கோடு ஊர்  செந்திலம் பதி வாழ்வே... ( அங்கை மென்குழல் திருப்புகல்) திருச்செந்தூர் எப்படி இருந்ததாம் தெளிந்தநீர் நிரம்பிய குளங்களும்  சோலைகளும் நிறைந்த ஊராகவும், சங்குகள்   விள ங்கும்  நகராக இருந்ததாம்  திரளும் மணி தரளம் உயர் தெங்கில் தங்கிப் புரள ... எறி திரை மகர சங்க துங்க திமிர சல நிதி தழுவு ... உருட்சியாகத் திரளும் மணியும் முத்தும் உயர்ந்த தென்னை மரங்களில் தங்கிப் புரளும்படி   அவற்றை  அள்ளி வீசுகின்ற அலைகளையும் மகர மீன்களையும்  சங்குகளையும் உடைய பரிசுத்தமான கடல் நீர் அணைந்துள்ள  கரையை உடைய ----------------Continue editing ----------------------------------------------------------------------  

கந்தகோட்டம்

 ஒருமையுடன்  நினது  திருமலரடி நினைக்கின்ற உத்தமர் தம் உறவுவேண்டும் உள்ஒன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும் பெருமைபெறு நினது புகழ் பேசவேண்டும் பொய்மை பேசாதிருக்க வேண்டும் பெருநெறி பிடித்தொழுக வேண்டும் மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும் மருவுபெண் ஆசையை மறக்கவே வேண்டும் உனை மறவாதிருக்க வேண்டும் மதிவேண்டும் நின் கருணைநிதி வேண்டும் நோயற்ற வாழ்வில் நான் வாழ வேண்டும் தருமமிகு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி சண்முகத் தெய்வமணியே. -மகான் இராமலிங்க சுவாமிகள் உரை: கந்தகோட்டத்தில் குடிகொண்ட முருகா, உனது திருவடியை தினமும் முழுமனதுடன் தியானிக்கின்ற உத்தமர்களின் தொடர்பு கிட்ட வேண்டும். மனதில் ஓர் எண்ணத்தை வைத்துக்கொண்டு வெளியே வேறான்றாகப் பேசுகின்ற பொய்யர்களின் தொடர்பு சேராமை வேண்டும்.பெருமையுடன் உனது கீர்த்தியைப் புகழ்ந்து பேசவேண்டும். பெருமைமிக்க சன்மார்க்க நெறியை கடைப்பிடித்து செல்ல வேண்டும். செருக்கு என்னும் பேய் பிடிக்காதிருக்க வேண்டும். பெண் ஆசையை மறக்கேண்டும். உன்னை என்றும் மறவாதிருக்க வேண்டும். நல்லறிவு வேண்டும். உனது அருள்

விநாயகர் அகவல் (ஔவையார்)

சீதக் களபச் செந்தா மரைபூம் பாதச் சிலம்பு பலஇசை பாடப் பொன் அரை ஞாணும் பூந்துகி லாடையும் வன்ன மருங்கில் வளர்ந்தழ கெறிப்பப் பேழை வயிறும் பெரும்பாரக் கோடும் வேழ முகமும் விளங்குசிந் தூரமும் அஞ்சு கரமும் அங்குச பாசமும் நெஞ்சிற் குடிகொண்ட நீலமேனியும் நான்ற வாயும் நாலிரு புயமும் மூன்று கண்ணும் மும்மதச் சுவடும் இரண்டு செவியும் இலங்கு பொன் முடியும் திரண்டமுப்புரி நூல் திகழொளி மார்பும் சொற்பதங் கடந்த துரியமெய் ஞான அற்புதன் ஈன்ற கற்பகக் களிறே முப்பழம் நுகரும் மூஷிக வாகன இப்பொழு தென்னை யாட்கொள வேண்டித் தாயாய் எனக்குத் தானெழுந் தருளி மாயாப் பிறவி மயக்க மறுத்தே திருந்திய முதலைந் தெழுத்துந் தெளிவாய் பொருந்தவே வந்தேன் உளந்தனிற் புகுந்து குருவடி வாகிக் குவலயந் தன்னில் திருவடி வைத்துத் திறமிது பொருளென வாடா வகைதான் மகிழ்தெனக் கருளிக் கோடா யுதத்தாற் கொடுவினை களைந்தே உவட்டா உபதேசம் புகட்டி என் செவியில் தெவிட்டாத ஞானத் தெளிவையுங் காட்டி ஐம்புலன் றன்னை அடக்கு முபாயம் இன்புறு கருணையின் இனிதெனக் கருளிக் கருவிக ளொடுக்குங் கருத்தினை யறிவித்து இருவினை தன்னை அறுத் திருள் கடிந்து தலமொரு நான்குந் தந்தெனக்கருளி மலமொரு

அருள் மழை பொழியும் ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி

அருள் மழை பொழியும் ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி திருச்சி மாவட்டத்தில் உள்ள சிவ ஆலயங்களில் திருவானைக்காவல் #ஜம்புகேஸ்வரர் ஆலயம் புகழ் பெற்ற தலம்.யானை பூஜித்ததால் இது #யானைக்காவல்; அம்பிகை ஈசனிடம் உபதேசம் பெற்ற தலமாதலால் #உபதேசத் தலம்; ஜம்பு மாதவ முனிவர் வழிபட்டதால் *ஜம்புவனம், *ஜம்புகேஸ்வரம், *ஜம்புவீச்வரம் என்றெல்லாமும் இத்தலம் அழைக்கப்படுகிறது. 🌀பஞ்சபூத தலங்களில் இத்தலம் நீருக்கு உரிய தலம். 51 சக்தி பீடங்களில் தண்டநாதபீடம் எனும் #வாராஹி பீடமாக இந்த சந்நதி விளங்குகிறது. 🌀காஞ்சிப் பெரியவர் #அகிலாண்டேஸ்வரிக்கு ஆதிசங்கர பகவத்பாதாள் உருவாக்கி பிரதிஷ்டை செய்த #சிவசக்ரம்,#ஸ்ரீசக்ரம் போன்ற இரண்டு தாடங்கங்களையும் புதுப்பித்து அம்பிகைக்கு அணிவித்து மகிழ்ந்தார். 🌀சிவன் கட்டளைக்காக அம்பிகை,பூலோகத்தில் மானிடப் பெண்ணாக பிறந்தாள்.இங்கு காவிரி நீரில் லிங்கம் பிடித்து வழிபட்டாள்.சிவன் அந்த லிங்கத்தில் எழுந்தருளி அவளுக்குக் காட்சி தந்தார்.அம்பிகையால் நீரில் லிங்கம் உருவாக்கப்பட்ட தலம் என்பதால் இது, பஞ்ச பூத தலங்களில் நீர் தலமானது. 🌀பிற்காலத்தில் ஜம்பு என்னும் முனிவர் சிவனை வேண்டி இங்கு தவமிருந்தார

சோளிங்கர் யோக நரசிம்மர்

சோளிங்கர் யோக நரசிம்மர்- ராம அவதாரம் முடிந்ததும் ராமபிரான் வைகுண்டம் எழுந்தருளும் வேளையில், தாமும் உடன் வருவதாக கூறினார் ஆஞ்சநேயர். ஆனால் ராமபிரான், ‘கடிகாசலத்தில் என்னைக் குறித்து தவம் செய்யும் சப்த ரிஷிகளுக்கும், காலன் மற்றும் கேயன் எனும் இரு அரக்கர்கள் தொல்லை கொடுக்கிறார்கள். அவர்களை என்னுடைய சங்கு, சக்கரத்தால் அழித்து கலியுகம் முடியும் வரை நீயும் கடிகாசலத்தில் சங்கு, சக்கரத்துடன் இருந்து யோக ஆஞ்சநேயராக மக்களுக்கு அருள்பாலித்து கலியுகம் முடியும் வேளையில் எம்மை வந்தடைவாய்’ என்று கூறிவிட்டார். இதனால்தான் யோக நிலையில் சங்கு, சக்கரத்துடன் அமர்ந்த நிலையில் ஆஞ்சநேயருக்கு தனி சன்னிதி கோவிலில் இருக்கிறது.கலியுகம் முடியும் வரை அனுமனும் கலியுகத்திலேயே வாழ்வதாக ஐதீகம். எனவேதான் இன்றும் பக்தியோடு, ராமாயணம் படிக்கும் இடம் தோறும் ஆஞ்சநேயர் அருவமாகவோ, உருவமாகவோ வந்து கலந்துகொள்வதாக ஐதீகம் . பக்த பிரகலாதனுக்காக தூணில் இருந்து அவதரித்தவர் நரசிம்மர்அத்திரி, காஷ்யபர், வசிஷ்டர், ஜமதக்னி, கவுதமர், பரத்வாஜா, விஸ்வாமித்ரர் என சப்த ரிஷிகளின் வேண்டுகோளுக்கு இணங்கி நரசிம்மப் பெருமாள் சோளிங்கபுரம் தலத்தில் சா

பஞ்ச வைத்தியநாதர் தலங்கள்

பஞ்ச வைத்தியநாதர் தலங்கள் ஸ்ரீ ருத்ரம் பத்தாவது அனுவாகத்தில் வரும் ஒரு ஸ்லோகம் பின்வருமாறு கூறுகிறது. யா தேருத்ர ஷிவா தநூः சிவ விஷ்வாஹ பேஷஜி । சிவ ருத்ரஸ்ய பேஷஜி தயா நோமிருட் ஜீவஸே॥ யா தே ருத்ர ஷிவா தனு ஷிவா விஷ்வாஹ பேஷஜி | ஷிவா ருத்ரஸ்ய பேஷஜி தயா நோ ம்ருதா ஜீவஸே|| இது இவ்வாறு மொழிபெயர்க்கப்பட்டுள்ளது: “ஓ ருத்ரா பகவானே! அந்த வடிவத்தால், உன்னுடையது அமைதியும், மங்களமும், எல்லா நாட்களும் மனித நோய்களுக்குப் பரிகாரமாக இருப்பதால், அதிக மங்களகரமானது என்றால், ஞானம் மற்றும் ஒளியின் அருளால், அது அறியாமையையும், சம்சாரத்தின் முழுத் துன்பத்தையும் முற்றிலுமாக அகற்றும். உமது கருணை வடிவமே, எங்களை நிறைவான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழச் செய்வாயாக.” இதன் எளிய பொருள், சிவனை ருத்ரனாகவும், அமைதியானதாகவும், மங்களகரமானதாகவும், மனித நோய்களுக்கான பரிகாரமாகவும் குறிப்பிடுவது. வைத்தியநாதர் அல்லது வைத்தீஸ்வரன் என்றால் நோய்களைக் குணப்படுத்துபவர் என்று பொருள்படும், இந்த ஆலயம் உண்மையில் நோய்களில் இருந்து விடுபட விரும்பும் மக்களால் வழிபடப்படுகிறது. ஆழமான, ஆன்மிகப் பொருள் என்னவெனில், நோயானது பூமியில் உள்ள வாழ்க்